ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் 18 பேர் இறப்புக்கு ஆளுநர் தான் காரணம்- அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் 18 பேர் இறப்புக்கு ஆளுநர் தான் காரணம்- அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால்  18 பேர் இறப்புக்கு ஆளுநர் தான் காரணம்- அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

142 நாட்களில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால், தமிழ்நாட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால்  18 பேர் இறப்புக்கு ஆளுநர் தான் காரணம் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டி உள்ளார். 
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேற்பட்டோர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் ’’தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு 142 நாட்கள் தாமதப்படுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசிடம் பல்வேறு விளக்கங்கள் கேட்ட ஆளுநர் இறுதியாக அச்சட்டத்தை திருப்பி அனுப்பி உள்ளார்.
 142 நாட்களில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால், தமிழ்நாட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு தமிழ்நாடு ஆளுநர் தான் முழுமையான பொறுப்பு வகிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கடுமையாக கண்டிப்பதாகவும், இதற்கு ஆளுநர் தமிழ்நாடு மக்களுக்கு விளக்கம் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் பொதுமக்களுக்கு போக்குவரத்து சேவையை வழங்க வேண்டிய அரசு தனியார் மையம் ஆக்குவதை பாமக கடுமையாக எதிர்ப்பதாகவும், தமிழ்நாட்டில் பேருந்துகளை அரசுடமையாக்கிய கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, தற்போதுள்ள ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சென்னையில் ஆயிரம் பேருந்துகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், பேருந்துகள் தனியார் மையமாக்குவதை  கைவிட வேண்டும் என்றும் மாறாக சென்னையில் தற்போதுள்ள 3500 பேருந்துகள் 7000 ஆக உயர்த்த வேண்டும் என்றும் அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும்’’என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com