'உறங்கிக் கொண்டிருக்கும் தேர்வாணையமே' - ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன TNPSC

'உறங்கிக் கொண்டிருக்கும் தேர்வாணையமே' - ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன TNPSC
'உறங்கிக் கொண்டிருக்கும் தேர்வாணையமே' -  ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன TNPSC

இனியும் காலம்தாழ்த்தி ஏமாற்றாமல் விரைந்து வெளியிடுங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப்- 4 முடிவுகளை 7 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாமல் தாமதமாகும் நிலையில் உடனே முடிவுகளை வெளியிடக்கோரி தேர்வர்கள் சமூக வலைதளமான ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7301 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டு ஜூலை மாதம் 24 ஆம் நாள் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் அக்டோபர் மாதமே வெளியாக வேண்டிய முடிவுகள் 7 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாமல் தாமதம் ஆகிக்கொண்டு இருக்கிறது. சுமார் 18 லட்சம் தேர்வர்கள் குரூப்- 4 தேர்வை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில், இம்மாதம் முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 
இந்நிலையில், லட்சக்கணக்கான தேர்வர்கள் சமூக வலைத்தளமான ட்விட்டரில் குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் எனக்கோரி பதிவிட்டு வருகின்றனர். #WeWantGroup4Results என்ற  ஹேஷ்டேக்கில் ரிசல்ட் தொடர்பாக தேர்வாணையத்தை டேக் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி தொடர்பான மீம்ஸ்களும் இந்த ஹேஷ்டேக்கில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ட்விட்டரில்  #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் இப்போதுவரை ட்ரெண்டாகி கொண்டு வருகிறது.
வேலையில்லாது வறுமையில் உழன்றுகொண்டிருக்கும் தேர்வரை, இனியும் காலம்தாழ்த்தி ஏமாற்றாமல் விரைந்து வெளியிடுங்கள் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com