'தமிழ்நாடு அரசின் நடவடிக்கையில் திருப்தி' - பீகார் குழு சொல்வது என்ன?

'தமிழ்நாடு அரசின் நடவடிக்கையில் திருப்தி' - பீகார் குழு சொல்வது என்ன?
'தமிழ்நாடு அரசின் நடவடிக்கையில் திருப்தி' - பீகார் குழு சொல்வது என்ன?

பீகார் அரசு சார்பாக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தர தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது” என பீகார் குழு தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூகவலைத்தளங்களில் வைரலாக வீடியோ பகிரப்பட்டது. சர்ச்சையை ஏற்படுத்திய அந்த வீடியோ, போலியான பதிவு என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களின் நிலை என்ன என்பதைக் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக நான்கு அதிகாரிகளை கொண்ட பீகார் குழுவினர் தமிழகம் வந்திருந்தனர். இந்த குழு இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழகத்தில் திருப்பூர் சென்று வடமாநில தொழிலாளர்களை நேரில் ஆய்வு செய்தனர். திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பிறகு, தற்போது சென்னையில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டுள்ளனர். தமிழகத்தில் அவர்களுக்கான பாதுகாப்பு எப்படி இருக்கிறது, என்னென்ன பணிகளை மேற்கொள்கிறார்கள் என்பதை பற்றின கருத்துக்களை கேட்டறிந்தனர்.
மேலும், இன்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளை சந்தித்தவுடன், தங்களது ஆய்வை முடித்துவிட்டு பீகார் செல்ல திட்டமிட்டுள்ளனர். தமிழகத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்களை பீகார் அரசுக்கு இந்த குழுவினர் தெரிவிக்க உள்ளனர்.  தமிழக அரசு தற்போது எடுத்துள்ள முடிவு திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த 4 நாட்களாக தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து ஆய்வு செய்துள்ளோம். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தர தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது. பீகார் அரசு சார்பாக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்; பீகாரிலிருந்து 30 ஆண்டுகள், 15 ஆண்டுகளாக பணிபுரிபவர்களும் உள்ளனர்’’ எனக் கூறினர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com