நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நாட்டை பிளவுபடுத்தும் எண்ணத்தில் உழுவைக் கொண்டிருக்கும் சிலர் நம் மீது புழுதி வாரி தூற்றுகிறார்கள். .தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் நம்மை விமர்சிக்கின்றனர். தொடர்ந்து திமுக ஆட்சியில் இருந்தால் நம் பிழைப்பு என்னாவது என சிலர் நினைக்கின்றனர். நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற தலைவர்கள் ஒன்றுபட்டால்தான் பாஜக ஆட்சியை அகற்ற முடியும். கவுரவம் பார்க்காமல் திமுகவினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். மதச்சார்பற்ற தலைவர்கள் ஒன்றிணைந்து மதவாத சக்திகளை விரட்டியடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்து தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று வருகிறோம் '’ என அவர் தெரிவித்தார்.