சாதி, மதம் தாண்டி மனிதம்தான் முக்கியம்- நடிகர் சசிகுமார்

சாதி, மதம் தாண்டி மனிதம்தான் முக்கியம்- நடிகர் சசிகுமார்
சாதி, மதம் தாண்டி மனிதம்தான் முக்கியம்- நடிகர் சசிகுமார்

நாம் வட மாநிலத்தவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம்.

சாதி, மதம் தாண்டி மனிதம்தான் முக்கியம் என்ற கருத்து அயோத்தி திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று நடிகர் சசிகுமார் தெரிவித்தார்.
பிரபல திரைப்பட நடிகரும் இயக்குனருமான நடிகர் சசிக்குமார் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள அயோத்தி திரைப்படம் தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெறும் நந்தன் என்கிற திரைப்பட சூட்டிங்கில் கலந்து கொள்ள வந்த நடிகர் சசிக்குமார். அயோத்தி திரைப்படத்தை திரையரங்கில் பொதுமக்களுடன் அமர்ந்து  பார்வையிட்டார். பின்னர் அவர் பேசும்போது, ’’சாதி, மதம் தாண்டி மனிதம் தான் முக்கியம். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற விசயம் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் நடந்த, நடக்கின்ற எல்லோரும் கடந்து வந்துள்ள, செய்தியைத்தான் இந்த படத்தில் சொல்லி இருக்கோம்.
நல்ல படம் எடுத்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நாம் வட மாநிலத்தவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம். அதைத்தான் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கதை எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கின்ற ஒரு விசயம் தான். அயோத்தி என்பது எல்லோரும் கடந்து வந்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் வருவது போன்று துபாயிலும் ஒரு நண்பர் இறந்தவர்களை சமூக சேவையாக அடக்கம் செய்து வருகிறார். இது போல மதுரையிலும் ஒருவர் செய்து வருகிறார். எல்லாருடைய வாழ்க்கையிலும் கடந்து வந்த விசயம்’’ என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com