ஏற்கனவே நடந்துள்ள 3 தேர்தல் வாக்கு வித்தியாசத்தையும் கடந்து சாதனை படைக்கிறார் காங்கிரசின் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை நடந்துள்ள சட்டமன்ற தேர்தல்களை ஒப்பிடுகையில், தற்போதைய தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திமுக கூட்டணியில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி 2011 ஆம் ஆண்டு உருவானது. அப்போதிலிருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் 2011, 2016, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் 4 தேர்தல்கள் இதுவரை நடைபெற்றுள்ளன. 2011 தேர்தலில் 10,644 வாக்குகள், 2016-ல் 7,794 வாக்குகள், கடந்த 2021 ஆம் தேர்தலில் 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருந்தனர்.
ஆனால் தற்போதைய ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முன் நடந்த 3 தேர்தல்களையும் கடந்து புதிய வரலாறு படைக்கிறது. அதிக வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார். அதாவது ஏற்கனவே நடந்துள்ள 3 தேர்தல் வாக்கு வித்தியாசத்தையும் கடந்து சாதனை படைக்கிறார் காங்கிரசின் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். தற்போது 7 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் சூழலில் தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 53,548 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் 33,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளது.
அதிமுக இதுவரை 19,936 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. மொத்தம் 15 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடக்கும் நிலையில், இன்னும் 8 சுற்றுகள் உணவு இடைவேளைக்கு பிறகு நடக்க உள்ளது. நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்திலும் தேமுதிக 4-வது இடத்திலும் உள்ளது. நாம் தமிழர் கவனம் பெறும் வகையில் வாக்குகள் பெற்றுள்ள நிலையில், தேமுதிக கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது