தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 112 வாக்குகளும் பெற்றுள்ளனர்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இத்தொகுதியில் திமுக கூட்டணியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இரண்டாவது சுற்று முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 8429 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 2873 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 526 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 112 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
மேலும், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட முத்து பாவா என்பவர் 178 வாக்குகள் பெற்று தேமுதிகவை விட முன்னிலையில் உள்ளார்.