முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் கடந்த மாதம் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இத்தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில், காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.
முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 3,642 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 1,414 வாக்குகளும், நாதக 63, தேமுதிக 17 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளதை கொண்டாடும் வகையில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து வருகின்றனர்.