வெல்லப்போவது யார்? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சற்று நேரத்தில் தொடக்கம்

வெல்லப்போவது யார்? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சற்று நேரத்தில் தொடக்கம்
வெல்லப்போவது யார்? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சற்று நேரத்தில் தொடக்கம்

2 அறைகளில் 16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் பலத்த பாதுகாப்பில் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி, வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றியுள்ள எலவு மலை, சுண்ணாம்பு ஓடை, சித்தோடு ஆகிய பகுதிகளில் உள்ள 7 டாஸ்மாக் கடைகள், பார்கள் இன்று மூடப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் வாக்குப் பதிவு 238 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் கட்சி மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தொகுதியில் 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் 1.70 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மொத்தம் 74.79% வாக்குகள் பதிவாகின.

இதற்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை ஈரோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் தொடங்க இருக்கிறது. 2 அறைகளில் 16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

மேலும், களத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளனர் 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com