இதுகுறித்து அவர், ‘’நாடாளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை 5 மாதத்திற்கு முன்பாக எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம். 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். திமுக உடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு கேலிக்கூத்து. இது ஜனநாயகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய அவப்பெயர். தமிழகத்தில் தேர்தல் ஆணையம் உள்ளதா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பணம் மற்றும் பரிசுகளை கொடுத்து தேர்தலை நடத்த வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.