எடப்பாடியுடன் இணைந்து திருமா கிண்டும் அல்வா... மருது.அழகுராஜ் உடைத்தெறிந்த ரகசியம்

எடப்பாடியுடன் இணைந்து திருமா கிண்டும் அல்வா... மருது.அழகுராஜ் உடைத்தெறிந்த ரகசியம்
எடப்பாடியுடன் இணைந்து திருமா கிண்டும் அல்வா... மருது.அழகுராஜ் உடைத்தெறிந்த ரகசியம்

பா.ம.க.வை கூட்டணியில் சேர்க்க தி.மு.க. செய்யும் பரிசீலனைக்கு பதிலடி தர வி.சி.க. தயாராகிறது.

அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதிமுக எடப்பாடி பழனிசாமி வசமானது. அவருக்கு உடனடியாக வாழ்த்து தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். அதிமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவிக்கும் முன்னே திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தது முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இதில் ஏதேனும் அரசியல் கணக்கு இருக்கலாம் என அப்போதே விவாதங்கள் எழுந்தன. 
அதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மருது.அழகுராஜ் கூறியுள்ள தகவல் திமுக- பாஜகவுக்கு அதிர்ச்சி தரும் ரகம். ‘’முறைகேடான வழியில், நெறியற்ற முறையில் தொண்டர்கள் உரிமையை பறித்து கொள்ளை பணத்தை கொண்டு கொள்முதல் செய்த கும்பலை வைத்து அரசியல் அபகரிப்பு நடத்தும் 
எடப்பாடிக்கு இன்னும் நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ முழுமையாக அங்கீகாரம் தராத நிலையில் அவருக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப் பதிவுக்கு முன்பாக வாழ்த்துச் சொன்னதன் நோக்கம் தங்கள் கட்சியினர் தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டாம்.
எடப்பாடியின் வேட்பாளர் தென்னரசை ஆதரியுங்கள் என்பதை குறிப்பால் உணர்த்தும் சமிக்ஞை என்கின்றனர். எப்படியோ பா.ம.க. ஆதரிக்காத எடப்பாடியின் வேட்பாளர் தென்னரசை தி.மு.க. கூட்டணியில் நீடித்துக் கொண்டே திருமா ஆதரித்திருக்கிறார் என்பதோடு எடப்பாடிக்கு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பா.ஜ.க.வை ஆதரிக்க வேண்டாம் என்கிற வேண்டுதலையும் தோழமை சுட்டுதலாக அவர் எடப்பாடியிடம் முன் வைத்திருக்கிறார்.
ஆக தேர்தல் முடிந்த கையோடு பா.ஜ.க.வை கழற்றி விட்டு விட்டு காங்கிரஸை நோக்கி வண்டியை நகர்த்த எடப்பாடி திட்டமிடுவதும், அந்த வண்டியில் வி.சி.க. போன்ற சில கட்சிகளை ஏற்றிக் கொள்ளவும் திட்டம் வகுக்கப் பட்டிருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் பா.ம.க.வை கூட்டணியில் சேர்க்க தி.மு.க. செய்யும் பரிசீலனைக்கு பதிலடி தர வி.சி.க. தயாராகி வருவதாக தெரிகிறது.
இதற்கான அடி வேலைகளை எடப்பாடியின் அரசியல் வியூக வகுப்பாளர் சுனில் காங்கிரஸில் இருந்து கொண்டே கையாண்டு வருவதாக தெரிகிறது. எப்படியோ பா.ஜ.க.வுக்கு, எடப்பாடியும், தி.மு.க.வுக்கு, திருமாவும் அல்வா கொடுக்க ஆயத்தமாகி வருவது தெளிவாகவே தெரிகிறது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com