மு.க.ஸ்டாலினுக்கு ஒட்டகத்தை பரிசாக வழங்கிய திமுக தொண்டர்

மு.க.ஸ்டாலினுக்கு ஒட்டகத்தை பரிசாக வழங்கிய திமுக தொண்டர்
மு.க.ஸ்டாலினுக்கு ஒட்டகத்தை பரிசாக வழங்கிய திமுக தொண்டர்

வந்திருந்தவர்கள் சால்வை, புத்தகங்களை முதல்வரிடம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

எழுபதாவது பிறந்த நாளை கொண்டாடி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருவண்ணாமலையை சேர்ந்த ஜாகிர் ஷா என்பவர் ஒட்டகத்தை பரிசாக வழங்கினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் தொண்டர்களைச் சந்தித்து அவர்களது வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டதோடு நன்றியும் தெரிவித்தார். அங்கு வந்திருந்த தொண்டர்களுக்கு மஞ்சப்பையில் மரக்கன்றுகள் வைத்து வழங்கப்பட்டது. விவசாய சங்கத்தின் சார்பில் ஆட்டுக்குட்டி ஒன்றும், அதேபோல் திமுக தொண்டர்கள் சார்பில் ஒட்டகம் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. வந்திருந்தவர்கள் சால்வை, புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களை முதல்வரிடம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com