தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 70வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்
இன்று 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர், ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 70வது பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்; நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பிறந்த நாள் வாழ்த்தில், ‘’மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். மக்களுக்கு "தி"னமும் "மு"ழு உடல் நலத்துடன் "க"டமையாற்ற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் தனது வாழ்த்தில், ‘’இன்று 70வது பிறந்த நாள் காணும், தமிழக முதல்வர், திமுக தலைவர், அன்புச் சகோதரர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
’’என்னுடைய இனிய நண்பர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நீண்டநாள் நல்ல ஆரோக்கியத்துடன் மன நிம்மதியுடன் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று அவருடைய 70வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துகிறேன்’’ என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.