அரசியல்
'ஆளுநர் தன் போக்கினை மாற்றிக் கொள்ளாவிட்டால் தமிழ்நாட்டில்' நடமாட முடியாதுமுத்தரசன் காட்டம்!
'ஆளுநர் தன் போக்கினை மாற்றிக் கொள்ளாவிட்டால் தமிழ்நாட்டில்' நடமாட முடியாதுமுத்தரசன் காட்டம்!
சனாதன கொள்கைகளைப் பின்பற்றி தமிழகத்தைச் சீரழிக்க முயற்சிக்கிறார்!
காரல் மார்க்ஸ் குறித்து அவதூறு பிரச்சாரம் செய்யும் ஆளுநர் ரவியைக் கண்டித்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்..
தமிழக ஆளுநர் ரவி ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகமாகச் செயல்படுத்தி வருகிறார்.சனாதன கொள்கைகளைப் பின்பற்றி தமிழகத்தைச் சீரழிக்க முயற்சிக்கிறார்.ஆளுநர் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் தமிழகத்தில் அவர் எங்கும் நடமாட முடியாது.காரல் மார்க்ஸ் குறித்து அவதூறு பிரச்சாரம் செய்தது கண்டிக்கத்தக்கது.இப்படித் தொடர்ந்து பேசி வந்தால் ஆளுநர் தமிழகத்தில் எங்கும் நடமாட முடியாது எனக் கூறினார்.