அரசியல்
நாங்கள் இல்லாமல் எந்த கொம்பனாலும் அதிமுகவை வழிநடத்த முடியாது... அடித்துச் சொல்லும் ஓபிஎஸ் தரப்பு
நாங்கள் இல்லாமல் எந்த கொம்பனாலும் அதிமுகவை வழிநடத்த முடியாது... அடித்துச் சொல்லும் ஓபிஎஸ் தரப்பு
எங்களை இல்லாமல் எந்த கொம்பனாலும் அண்ணா திமுகவை வழிநடத்த முடியாது.
எங்களை இல்லாமல் எந்த கொம்பனாலும் அண்ணா திமுகவை வழிநடத்த முடியாது. அது எடப்பாடி கொம்பனாலும் முடியாது என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், ’’இந்தத் தீர்ப்பு ஒன்றும் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லை. உயர் நீதிமன்றம் சொன்னதை, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த தேர்தலில் மட்டுமே இரட்டை இலை சின்னத்தை அவர்கள் பயன்படுத்த முடியும். அடுத்த தேர்தலில் அவர்கள் பயன்படுத்த முடியாது. சிவில் கோர்ட்டு நீதிமன்றத்தின் கருத்துக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளனர். அதனால் எங்களுக்கு பாதிப்பு இருக்காது. எனவே இதே நிலை தொடரும். இரட்டை இலை சின்னம் இந்த தேர்தலோடு சரி, பின்னர் யாருக்கு சொந்தம் என கோர்ட்டு தான் முடிவு செய்யும். எங்களை இல்லாமல் எந்த கொம்பனாலும் அண்ணா திமுகவை வழிநடத்த முடியாது. அது எடப்பாடி கொம்பனாலும் முடியாது’’ எனத் தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து கூறுவது தொடர்பாக கேட்டதற்கு, ’’இந்த தீர்ப்பை பற்றி தெரியாமல் சில அறிவிலிகள் பேசுவதற்கு பதில் கூற முடியாது. அறிவாளிகள் பேசினால் கூற முடியும். இப்படி பேசுபவர்கள் அறிவிலிகள்’’ எனத் தெரிவித்தார்.