உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் பெரிய அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளார். இந்த தீர்ப்பால், ஓபிஎஸ் நிலை கேள்விக்குறியாகி உள்ளதால், அவரது ஆதரவாளர்களும் குழம்பிப்போய் உள்ளனர். பொதுக்குழு முடிவுகள் செல்லும் என்ற தீர்ப்பால், ஓபிஎஸ் நீக்கமும் செல்லுபடி என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், ஓபிஎஸ்ஸால் நியமிக்கப்பட்ட அனைத்து நியமனங்களும் செல்லாததாகியுள்ளது. எனவே, ஓபிஎஸ் அணியில் இருக்கும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி அணிக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. கடந்த ஜூன் மாதம் போல, கூண்டோடு நிர்வாகிகள் பலர் ஈபிஎஸ் அணிக்குத் தாவினால், ஓபிஎஸ் நிலை இன்னும் கேள்விக் குறியாகக்கூடும்.