எட்டப்பர்களின் முகத்திரை கிழிந்தது - எடப்பாடி பழனிசாமி அதிரடி

எட்டப்பர்களின் முகத்திரை கிழிந்தது - எடப்பாடி பழனிசாமி அதிரடி
எட்டப்பர்களின் முகத்திரை கிழிந்தது - எடப்பாடி பழனிசாமி அதிரடி

ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்ட கோயிலில் வழிபட்டவுடன் அற்புதமான செய்தி வந்து சேர்ந்தது.

எட்டப்பர்களின் முகத்திரை கிழிந்தது என அதிமுக இடைக்காலப்பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி இடைக்காலப்பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறித்து மதுரையில் திருமண நிகழ்வில் பங்கேற்று பேசினார். அப்போது, ‘’"தீர்ப்பு வருகிறது என்றவுடன் இரவில் எனக்கு தூக்கமே வரவில்லை. அதிமுகவை அழிக்க நினைக்கும் சில எட்டப்பர்கள், திமுகவின் B டீமாக உள்ளவர்களின் முகத்திரைகள் இன்று கிழிக்கப்பட்டுள்ளது. 
அதிமுக குடும்ப கட்சி கிடையாது; மக்களுக்காக உழைக்கும் கட்சி. உச்ச நீதிமன்ற தீர்ப்பை நினைத்து இரவு தூக்கமே வரவில்லை; தீர்ப்பு எப்படி இருக்குமோ என பயந்தேன். தீர்ப்பு சாதகமாக வெளியானதால் மகிழ்ச்சி. இனி அதிமுக ஒரே அணி தான். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களுக்குத் தான் ஓட்டு. ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்ட கோயிலில் வழிபட்டவுடன் அற்புதமான செய்தி வந்து சேர்ந்தது'' என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com