காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக மூதறிஞர் ராஜாஜியின் பேரன் சி.ஆர்.கேசவன் அறிவித்துள்ளார். விலகல் கடிதத்தை, கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ‘கட்சி தற்போது எதை அடையாளப்படுத்துகிறதோ, எதை இப்போது பிரசாரம் செய்ய முற்படுகிறதோ அதை தன்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை என்று கடிதத்தில் வேதனை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலர் பொறுப்பிலிருந்தும் சி.ஆர்.கேசவன் ராஜினாமா செய்துள்ளார். புதிய பயணத்தை தொடங்க காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காக உழைத்ததற்கான எந்த மதிப்பையும் காணவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.