இந்தப் பேச்சு, அந்தப் பகுதி மக்களிடம் சர்ச்சையை கிளப்பி உள்ளது
சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே என்று தேர்தல் பிரசாரத்தில் கமல் பேசியது நாடெங்கும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந் நிலையில் அவர் திருப்பரங்குன்றம் பகுதியில், ஃப்ளையிங்ஸ் குறித்து பேசியது, அப் பகுதியில் வேறு விதமான சர்ச்சையை கிளப்பி உள்ளது.
திருப்பரங்குன்றம் அருகேயுள்ள தோப்பூர் பகுதியில் பேசிய கமல் ஹாசன், இங்கே என்னை பார்க்க வந்திருக்கிற ஆத்தாக்கள், எனக்கு ஏழெட்டு தடவை ப்ளையிங் கிஸ் கொடுத்துட்டாங்க. அவங்களுக்கு என்னோட அன்பை தெரிவிச்சுக்கிறேன் என்றார்.
இந்தப் பேச்சு, அந்தப் பகுதி மக்களிடம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இன்னும் சகலகலா வல்லவன் காலத்து ஹீரோ நினைப்பில் உங்க தலைவர் கமல் இருக்கிறாரா என்றும், கிராமத்து பகுதியில் வந்து ஃப்ளையிங் கிஸ் பற்றிப் பேசுவதா என்றும் கமல் கட்சியினரை, அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வறுத்தெடுத்துவிட்டனர்.