அரசியல்
கணக்கு சார்வாள் ஸ்டாலின்… வரலாறு சார்வாள் கமல்… அமைச்சர் கமெண்ட்!!
கணக்கு சார்வாள் ஸ்டாலின்… வரலாறு சார்வாள் கமல்… அமைச்சர் கமெண்ட்!!
இப்படி உறுப்படியற்ற வேலைகளை ஸ்டாலினும், கமலும் செய்வது கேலிக் கூத்தாகும் என்றார்
சென்னையில், அமைச்சர் ஜெயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இந்து என்ற சொல்லுக்கான கமலின் விளக்கம் குறித்து நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர், ஏற்கனவே கணக்கு வாத்தியார் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். தப்பு தப்பா கணக்கை கூட்டல் செய்வார் அவர். இப்போது அந்த வரிசையில் வரலாற்று ஆசிரியராக கமலும் நமக்கு கிடைத்திருக்கிறார். நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கிறது. மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டும் என்று ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதை விட்டு விட்டு வரலாற்று ஆராய்ச்சிகளை செய்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டுமா? இப்படி உறுப்படியற்ற வேலைகளை ஸ்டாலினும், கமலும் செய்வது கேலிக் கூத்தாகும் என்றார்.