ஈரோடு இடைத்தேர்தல்; அமமுகவுக்கு ஆதரவளித்த முக்கியக் கட்சி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அமமுகவுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப் 27-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவ பிரசாந்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஜன 27-ம் தேதி அறிவித்தார். இந்நிலையில் அண்ணா பிறந்தநாளையொட்டி இன்றைய தினம் அமமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்ச்சியில், அண்ணா திருவுருவப்படத்திற்கு டி.டி.வி.தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவேட்பாளரை அறிவிக்கும் பட்சத்தில் அது குறித்து பரிசீலிப்பேன்’’எனத் தெரிவித்தார்.
அப்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, பொதுச்செயலாளர் சமியுல்லா மற்றும் அஹமது ஷெரீப் ஆகியோர் டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆதரவு கடிதம் அளித்தனர்.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

https://youtu.be/lORQmJvzXUI
