’ஸ்கூல்ல யூனிபாஃர்ம் கொடுங்க...’ முதுகில் புத்தகப்பையை சுமந்து சைக்கிளில் வந்த திமுக எம்.எல்.ஏ.,க்கள்

’ஸ்கூல்ல யூனிபாஃர்ம் கொடுங்க...’ முதுகில் புத்தகப்பையை சுமந்து சைக்கிளில் வந்த திமுக எம்.எல்.ஏ.,க்கள்
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி பிள்ளைகளுக்கு சீருடை வழங்காத கண்டித்து, பள்ளிச்சீருடையில் சைக்கிளில் திமுக எம்எல்ஏக்கள் முதுகில் புத்தகப்பையை சுமந்து சட்டப்பேரவை கூட்டத்திற்கு வந்தனர். 

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், காரைக்கால் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், அறிவித்தபடி இலவச சைக்கிள், லேப்டாப் ஆகியவை வழங்கப் படாததை கண்டித்தும், இதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் நூதன முறையில் அவைக்கு வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். 

பள்ளிச் சீருடை அணிந்திருந்த அவர்கள், புத்தகப் பையை முதுகில் போட்டுக் கொண்டு பள்ளி மாணவர்களைப் போல மிதிவண்டிகளில் மிஷன் வீதியில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி சட்டபேரவைக்கு வந்தனர். அதே உடையுடன் சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சென்ற அவர்கள், மாணவர்களுக்கு சீருடை கள், மிதிவேண்டி, லேப்டாப் ஆகியவற்றை வழங்காத புதுச்சேரி அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்