ஒரே அணியாக ஒரே வேட்பாளரை நிறுத்துங்கள்... ஓபிஎஸ்- எடப்பாடிக்கு பாஜக வலியுறுத்தல்

தமிழ்நாடு நலனுக்காக இஒணைந்து செயல்படுமாறு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தியதாக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’திமுகவை எதிர்க்க உறுதியான வேட்பாளர் தேவை. ஒரே அணியாக ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு. தமிழ்நாடு நலனுக்காக இணைந்து செயல்படுமாறு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தினோம். தமிழக மக்கள் திமுக ஆட்சி மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். இடைத்தேர்தலில் திமுக தோல்வியை தழுவும். பாஜகவின் நிலைப்பாட்டை அறிவிக்க பிரவரி 7ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. ஜெயலலிதா கூட திமுகவை தீய சக்தி என்று அழைத்தே தேர்தலை சந்தித்தார். அதிமுகவை தொடங்கும்போது திமுகவை தீயசக்தி என எம்.ஜி.ஆர் அழைத்தார்’’ என அவர் கூறினார்.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

https://youtu.be/lORQmJvzXUI
