தமிழகத்தை சேர்ந்த பாம்பு பிடி வீரர்கள் இருவருக்கு பத்மஸ்ரீ விருது

தமிழகத்தை சேர்ந்த பாம்பு பிடி வீரர்கள் இருவருக்கு பத்மஸ்ரீ விருது
இருளர் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான தமிழகத்தை சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு 2023 ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது அறிவித்து மத்திய அரசு கௌரவித்துள்ளது.

குடியரசு தின விழாவையொட்டி, 2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 26 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையனுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இருவரும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவர்கள் ஆவர். உலகம் முழுவதும் சென்று அதிக விஷத்தன்மைமிக்க பாம்புகளைப் பிடித்தவர்கள். பாம்பு விஷ முறிவு மருந்துகளை கண்டுபிடித்ததில் முக்கிய பங்காற்றியவர்கள்.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் திலீப் மஹாலானாபிஸூக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்ச்சத்து குறைப்பாட்டுக்கு தீர்வு காணும் ஒ.ஆர்.எஸ். கரைசலை கண்டுபிடித்த சாதனைக்குரியவர் மருத்துவர் திலீப். மருத்துவ துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்