தேனீர் விருந்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்என் ரவி அழைப்பு

தேனீர் விருந்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்என் ரவி அழைப்பு
குடியரசு தின விழாவையொட்டி நாளை மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்க்கு, தொலைபேசி வாயிலாக ஆளுநர் ஆர்.என் ரவி அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை, நாடு முழுவதும் 74வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதியும், மாநிலங்களில் ஆளுநர்களும் கொடியேற்றுவர். தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்ற உள்ளார். இதையடுத்து நாளை ஆளுநர் மாளிகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த விருந்தில் பங்கேற்க அனைத்து கட்சியினருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். அதில் திமுக கூட்டணியை சேர்ந்த சில கட்சிகள் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நாளை நடைபெறும் விருந்தில் பங்கேற்க வருமாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்