நாம் நட்சத்திர கூட்டத்தில் கால்பதிப்போம்... குடியரசுத் தலைவர் நம்பிக்கை உரை..!

நாம் நட்சத்திர கூட்டத்தில் கால்பதிப்போம்... குடியரசுத் தலைவர் நம்பிக்கை உரை..!
குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாட்டு மக்களிடையே உரையாற்றினார். 

அப்போது அவர், ‘’74வது குடியரசு தினத்தையொட்டி அனைத்து இந்தியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மகாத்மா காந்தியின் குறிக்கோளின்படி அவரது வழியில் நாம் சுதந்திரத்தை அடைந்தோம். இந்தியாவின் பயணம் பல நாடுகளுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது. நாம் அனைவரும் இந்தியர்கள். பல மதங்களும்,மொழிகளும் நம்மைப் பிரிக்கவில்லை, நம்மை ஒன்றிணைத்துள்ளன.  அதனால்தான் நாம் ஜனநாயகக் குடியரசாக வெற்றி பெற்றுள்ளோம். இதுதான் இந்தியாவின் சாராம்சம். தொன்மையான பராம்பரியம் மிக்க நாடு இந்தியா. உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்திய உருவெடுத்திருப்பது மகிழ்ச்சி. 

சர்வதேச சமுதாயம் மரியாதையுடன் இந்தியாவை பார்க்க தொடங்கியுள்ளது.  சர்வதேச அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பு அதிகரித்து வருகிறது. நாம் நட்சத்திர கூட்டத்தில் கால்பதிப்போம் என்கிற நம்பிக்கை உள்ளது.  இளம்பெண்கள் கல்வி உள்ளிட்ட துறைகளில் கால்பதிப்பது என்னை ஆச்சர்யப்படுத்துகிறது.   உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்திய உருவெடுத்திருப்பது மகிழ்ச்சி. நாம் அனைவரும் இந்தியர்கள். பல மதங்களும்,மொழிகளும் நம்மைப் பிரிக்கவில்லை, நம்மை ஒன்றிணைத்துள்ளன. அதனால்தான் நாம் ஜனநாயகக் குடியரசாக வெற்றி பெற்றுள்ளோம். இதுதான் இந்தியாவின் சாராம்சம்’’என அவர் தெரிவித்துள்ளார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்