பாகிஸ்தானுக்கு எதிரான சர்ஜிக்கல் ஸ்டிரைக்... ராகுல் காந்தி அந்தர்பல்டி

பாகிஸ்தானுக்கு எதிரான சர்ஜிக்கல் ஸ்டிரைக்... ராகுல் காந்தி அந்தர்பல்டி
பாகிஸ்தானுக்கு எதிரான சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து கேள்வி எழுப்பிய திக்விஜய் சிங்கின் கருத்துகளை காங்கிரஸ் ஏற்கவில்லை. அந்த அறிக்கை கேலிக்குரியது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பின் வாங்கியுள்ளார். 

ஜம்முவில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “திக்விஜய் சிங்கின் கருத்துக்களுடன் நாங்கள் உடன்படவில்லை. ஆயுதப் படைகள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்கின்றன என்பதில் நாங்கள் முற்றிலும் தெளிவாக இருக்கிறோம். அதற்கான ஆதாரத்தை அவர்கள் அளிக்கத் தேவையில்லை. இந்திய ராணுவத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு" என்று ராகுல் காந்தி கூறினார்.

ஜம்முவில் திங்கள்கிழமை ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையின் போது பேசிய திக்விஜய் சிங், ’எல்லை தாண்டிய ராணுவ நடவடிக்கை குறித்து சந்தேகம் எழுப்பினார். மத்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகளைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் எந்த ஆதாரமும் இல்லை. பொய் மூட்டை கட்டி ஆட்சி செய்கிறார்கள்” என்று கூறியிருந்தார். அவரின் கருத்துக்கு கடும் விமர்சனங்கள் கிளம்பிய நிலையில் ராகுல் காந்தி தற்போது விளக்கமளித்துள்ளார். திக்விஜய் சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துகள் அரசியல் விமர்சனங்களை உருவாக்கிய நிலையில், அவர் இன்று ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஆனால், இராணுவத்தை கேள்வி கேட்டதற்காக திக்விஜய் சிங்கையும், காங்கிரஸையும் "தேச விரோதிகள்" என்று பாஜக சாடியது. இதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் திக் விஜயின் கருத்துக்களை காங்கிரஸ் ஏற்கவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்