சேர் எடுத்துட்டு வாடா... திமுக கட்சிக்காரரை கல்லால் எறிந்த அமைச்சர்

கட்சிக்காரரை கல்லைக் கொண்டு எறிந்து தாக்க முயன்ற அமைச்சர் ஆவடி நாசரின் வீடியோ வைரலாகி வருகிறது.
திருவள்ளுரில் நாளை மாலை வீர வணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த இடத்தில் பால் வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் இன்று காலை ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் அமருவதற்கு நீண்ட நேரம் ஆகியும் நாற்காலி எடுத்து வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரம் அடைந்த அமைச்சர் ஆவடி நாசர், நாற்காலி எடுத்து வரச் சென்றவர்கள் மீது கல்லெறிந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “போடா ஒரு சேர் எடுத்துட்டு வா, போடா ஒரு சேர் எடுத்துட்டு வாடா” என்று கோபமாக பேசியபடி கல்லை தூக்கி எறியும் காட்சி பதிவாகியுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

https://youtu.be/lORQmJvzXUI
