யாருக்காகவும் அதிமுக காத்திருக்காது... பாஜகவுக்கு ஜெயக்குமார் பதிலடி

யாருக்காகவும் அதிமுக காத்திருக்காது... பாஜகவுக்கு ஜெயக்குமார் பதிலடி
தமிழ்நாட்டில் பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றன.

அதிமுக இரு பிரிவுகளாக பிரிந்து இடைத்தேர்தலில் போட்டியிட ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது.  இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவில் பிரிவும் இல்லை, கலகமும் இல்லை. 

ஈபிஎஸ் தலைமையில் ஒன்றுபட்டு நிற்கிறோம். இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு என்பதை அண்ணாமலை சூசமாக கூறியுள்ளார். அண்ணாமலை அதிமுக என குறிப்பிட்டது எங்களைத்தான். பாஜக தேசிய கட்சி என்பதால் தனது நிலைபாட்டை கூற தாமதமாகிறது.

அதிமுக  யாருக்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தொண்டர்களால் நிராகரிக்கப்பட்டவர் ஓபிஎஸ். திமுகவை எதிர்க்க வேண்டுமென்ற கட்சியின் கொள்கையை மீறியவர். 

தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற தீய நோக்கம் தினகரனுக்கு உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி எடப்பாடி பழனிசாமிதான் இடைக்கால பொதுச்செயலாளர்” என தெரிவித்தார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்