குளிர்கால கூட்டத்தொடரில் ஒருநாள் கூட பங்கேற்காத இளையராஜா... வருகைப்பதிவு பூஜ்ஜியம்..!

குளிர்கால கூட்டத்தொடரில் ஒருநாள் கூட பங்கேற்காத இளையராஜா... வருகைப்பதிவு பூஜ்ஜியம்..!
சென்ற டிசம்பரில் 13 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவை குளிர்கால கூட்ட தொடரில் ஒருநாள் கூட பங்கேற்காத  மாநிலங்களவை நியமன எம்.பி. இளையராஜா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. . இந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகை பதிவு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதன்படி, நியமன எம்.பி.க்களில் தடகள வீராங்கனை பி.டி.உஷா 13 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். ஒரு விவாதத்தில் கலந்துகொண்டார். வீரேந்திர ஹெக்டே 5 நாட்களும், விஜயேந்திர பிரசாத் 2 நாட்களும் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர். 

தமிழ்நாட்டிலிருந்து நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா கூட்டத்தொடரின் ஒருநாள் கூட பங்கேற்கவில்லை. அவருடைய வருகைப்பதிவு பூஜ்ஜியமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்