தூண்டில் போட்ட பாஜக.. விஸ்வாசம் மாறாத மு.க.அழகிரி

தமிழகத்தை பல முறை ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கிற இந்த தேசத்தின் மூன்றாவது மிகப்பெரிய இயக்கமாக எழுந்து நிற்கும், திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒரு காலத்தில் தென் தமிழக முகமாகவே மாறி நின்றவர்தான் மு.க.அழகிரி.
இன்று தி.மு.க.வில் ஒரு உறுப்பினராக சேர்வதற்காக உதயநிதியின் முன் அவர் குட்டிக்கரணங்கள் அடித்தது ஆச்சரியப்பட வைக்கிறது. அரசியல் மேகம் ஒரு மலையையே அசைத்துப் பார்க்கிறதே என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
மு.க.அழகிரியை அவரது தம்பி மகன் உதயநிதி சந்தித்திருப்பதும், உதயநிதியை அழகிரி குடும்பம் கொஞ்சி மகிழ்ந்து வரவேற்றிருப்பதும் திமுக நடுநிலைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தியது.
தனக்குப் பின் பிறந்த தன் தம்பி ஸ்டாலின், தமிழக முதல்வராகவும், அவரது மகன் தமிழக அமைச்சராகவும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். தானும் தன் மகனும் அரசியலில் புறக்கணிக்கப்பட்டு கிடப்பதை அழகிரியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
பா.ஜ.க,வில் இணைகிறேன் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார் அழகிரி. உதயநிதியின் பதவியேற்புக்கு பிறகு ‘இனியும் பொறுமையாய் இருந்தால் நம் குடும்ப எதிர்காலம் காலி’என்று பொங்கி எழுந்து அமித்ஷாவை, சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுவிட்டாராம் அழகிரி
இந்நிலையில்தான், அதை உளவுத்துறை மூலம் ஸ்மெல் பண்ணிவிட்டு திடீரென பாசக்கரத்தை நீட்டியுள்ளார் தி.மு.க.வின் தலைவர் என்கிறார்கள்.
மு.க.அழகிரி பா.ஜ.க.வில் இணைந்துவிட்டால் அவரை வைத்துக் கொண்டு தென் தமிழக தி.மு.க.வை ஒரு ஆட்டு ஆட்டி, கலக்கிவிடும் பா.ஜ.க என்று கணக்கு போட்டுதான் இப்படியொரு யு டர்ன் போட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
அழகிரியும் ‘என் குடும்பத்துக்கு அரசியல் முக்கியத்துவம் வேண்டும். அது எங்கள் கட்சியோ அல்லது பா.ஜ.கவோ எதுவாக இருந்தாலும் சரி’என்று தெளிவான முடிவை எடுத்ததன் விளைவாகதான் தன் தம்பி ஸ்டாலின், தன் மகன் வழியே விடுத்த தூதை ஏற்றுக் கொண்டுள்ளார் என்கிறார்கள்.
ஆக தி.மு.க.வில் மீண்டும் கண்கள் பனித்து, இதயம் இனித்துள்ளது என கூறப்பட்டு வந்த நிலையில், அழகிரி இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில்” திமுக கொடி பறக்க அழகிரி பெயரிலான ட்விட்டர் பக்கத்தில் ’’ஆட்சிகள் மாறலாம்; காட்சிகள் மாறலாம்; ஆனால், விஸ்வாசம் அது என்றும் மாறாது’’என வாசகம் இடம்பெற்றிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

https://youtu.be/lORQmJvzXUI
