ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேமுதிக தனித்துப்போட்டி - பிரேமலதா

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேமுதிக தனித்துப்போட்டி - பிரேமலதா

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே சுதீஷ் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில்  மக்களின் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்கின்ற நெய்வேலி அனல் மின் நிலையம் மற்றும் சேலம் இரும்பு உருக்கு ஆலைகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சிகளை தேமுதிக வன்மையாகக் கண்டிப்பதுடன், இம்முயற்சியை உடனடியாக கைவிட்டு பொதுமக்களின் கருத்துக்கேற்ப இப்போதைய நிலைமையே தொடர்ந்து நீடித்திட வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்துகிறது.

பரந்தூர் விமான நிலைய விரிவாக்குதல் திருச்சி,கோவை, சேலம் விமான நிலைய விரிவாக்குதல் பணியினை பொதுமக்களின் முழுமையான வெளிப்படையான கருத்துக்களை கேட்டபின்பு அதற்கேற்றவாறு செயல்படுத்த தேமுதிக கேட்டுக்கொள்கிறது.

ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா மறைவிற்கு மாமன்றம் வருத்தம் தெரிவிப்பதோடு,வருகின்ற இடைத்தேர்தலில் தேமுதிக தன்னிலையை நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் முடிவெடுக்க முழு அதிகாரம் வழங்கி அவர் எடுக்கும் முடிவிற்கு இக்கூட்டம் முழுமனதாகச் சம்மதம் தெரிவித்துக்கொள்கிறது உள்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா , ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும்.ஈரோடு கிழக்கில் மாவட்டச் செயலாளர் ஆனந்த் வேட்பாளராகப் போட்டியிட உள்ளார் என தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்