அரசியல்
தமிழக மக்களிடம் பாஜக கொள்கை எடுபடாது- கார்த்திக் சிதம்பரம்!
தமிழக மக்களிடம் பாஜக கொள்கை எடுபடாது- கார்த்திக் சிதம்பரம்!
பாஜக தலைவர்கள் அடிக்கடி வந்தாலும் அவர்களின் மதவாத கொள்கையை தமிழக மக்கள் நிராகரித்து விடுவார்கள்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயலில் சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தமிழகத்திற்கு அடிக்கடி வந்தாலும் அவர்களின் மதவாத கொள்கையை தமிழக மக்கள் நிராகரித்து விடுவார்கள்.
தமிழகத்தில் பாஜக நிராகரிக்கப்படும் கட்சியாகவே இருக்கும். கொரோனா குறித்து மீடியாக்கள் பீதியை கிளப்பக் கூடாது.
கொரோனா பாதிப்பை ஏற்படுத்தாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் மக்கள் பீதி அடைய தேவை இல்லை என்று கூறினார்.
மேலும், பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.