மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால்,அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்குமான டக்கப்போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அவ்வப்போது ட்விட்டர் யுத்தம் நடத்தி நெட்டிசன்களின் விமர்சன பசிக்கும், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் தீனி போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஏற்கனவே ரஃபேல் வாட்ச் விவகாரம் முற்றுப்புள்ளியை எட்டாத நிலையில், தற்போது புதிய ட்வீட்டை தட்டிவிட்டிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
“கடந்த 10ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள்.
விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள்.விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது.
மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.
ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை?”. இதுதான் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்ட பரபரப்பு ட்வீட்.
ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சியினர் மீது ட்விட்டரில் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இன்றைய ட்வீட்டில் போட்டோஷாப் கட்சியின் மாநிலத்தலைவர் என்று யாரை குறிப்பிட்டிருக்கிறார்? என்பதுதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.