அரசாணை 152ஐ ரத்து செய்ய வேண்டும் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்வீட்

அரசாணை 152ஐ ரத்து செய்ய வேண்டும் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்வீட்
அரசாணை 152ஐ ரத்து செய்ய வேண்டும் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்வீட்

மாநகராட்சி பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு காலங்களில் குறைந்தது சம்பளத்துடன் கூடிய 6 மாத விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார் விஜயகாந்த்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்   தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள அரசாணை எண் 152ஐ ரத்து செய்ய வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். 

மேலும் “கடைநிலை ஊழியர்களான தூய்மை பணியாளர்களை முதன்மை பணியாளர் என்று அறிவித்து அரசு ஆணையிட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார். 

நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள அரசாணை எண் 152 காரணமாகத் தமிழகத்தில்  20 மாநகராட்சிகளிலும் 20 வகை பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளன. 

இதனால் மக்களின் அன்றாட சேவைகளான குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, வரி வசூல் போன்ற பெரும்பாலான பணிகள் பாதிப்படையும். இப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். 

எனவே அரசாணை 152ஐ ரத்து செய்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் குழு பணியாளர்கள் பணி செய்யும் போது விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டால் இழப்பீடு தொகையோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். 

மாநகராட்சி பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு காலங்களில் குறைந்தது  சம்பளத்துடன் கூடிய 6 மாத விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.

அனைத்து மாநகராட்சிகளிலும் பணிபுரியும் தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com