திருச்சி சூர்யா சிவாவுக்கு காயத்ரி ரகுராம் சரமாரி கேள்வி..?

திருச்சி சூர்யா சிவாவுக்கு காயத்ரி ரகுராம் சரமாரி கேள்வி..?

சமீபத்தில் சூர்யா சிவா பாஜகவில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் இந்த முடிவுக்கு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தான் காரணம் என்றும் ஒரு கடிதத்தை டுவிட்டரில் பதிவிட்டார்.

மேலும் காயத்ரி ரகுராம் மற்றும் டெய்சி சரணை வைத்து இருவரும் விளையாடுவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில் சூர்யா சிவாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காயத்ரி ரகுராம் சில கேள்விகளை கேட்டுள்ளார்.

அவர் கூறும் போது, 'கேசவ விநாயகத்துடன் திருச்சி சூர்யாவுக்கு எந்த வேலையும் கிடையாது. கட்சியில் சேர்ந்த நாள் முதல் அதிகபட்சமாக ஐந்து அல்லது ஆறு முறை மட்டுமே சூர்யா கேசவ விநாயகத்தை சந்தித்திருப்பார்.

இந்த சூழ்நிலையில் கேசவ விநாயகத்தை அவர் எதிர்க்க என்ன காரணம்?

நீங்கள் காட்டும் வெறுப்பு உங்களுடையதா? அல்லது வேறு ஒருவருடையதா?

மேலும் எல்.முருகன் மாநிலத் தலைவராக இருந்தபோது திருச்சி சூர்யா கட்சியிலேயே கிடையாது. அப்படி இருக்கும்போது அவரை எதிர்க்க என்ன காரணம்?

இவர்கள் உங்களையும், அண்ணாமலையையும் எந்த விதத்தில் தொந்தரவு செய்தார்கள் என்று கூற வேண்டும்.' என்று கூறியுள்ளார்.

காயத்ரி ரகுராமின் இந்த கேள்விகள் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்