புதுடெல்லி: 5 மாநில தேர்தல் அதிகாரிகள் மாற்றம் - தேர்தல் ஆணையம் உத்தரவு - பின்னணி தகவல்
விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் தேர்தல் அதிகாரிகளை பணி மாற்றம் செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநில தலைமை செயலாளர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த சில மாதங்களில், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மிசோரம், சட்டீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய சட்டப்பேரவை பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.
இந்த 5 மாநிலத்தில் உள்ள தலைமை செயலாளர்களுக்கு, தலைமை தேர்தல் ஆணையம், அவசரமாக ஒரு கடிதம் எழுதியுள்ளது.
அதில், சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்துவதில் நேரடி தொடர்புடைய அதிகாரிகள், தங்கள் சொந்த மாவட்டத்திலோ அல்லது நீண்ட காலமாக பணியாற்றும் இடங்களிலோ நியமிக்கப்படுவதில்லை.
எனவே, தேர்தல்களுடன் நேரடியாக தொடர்புடைய அதிகாரி அவரது சொந்த மாவட்டத்தில் பணியமர்த்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த 5 மாநிலங்களில் தேர்தல் பணிகளில் தலைமைை தேர்தல் ஆணையம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.