குஜராத் சட்டமன்ற தேர்தல்: இலவசங்களை அள்ளி வீசிய பாஜக..!

குஜராத் சட்டமன்ற தேர்தல்: இலவசங்களை அள்ளி வீசிய பாஜக..!

இதற்காக பாஜக,காங்கிரஸ்,ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த வாக்குறுதியால் குஜராத் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகளை காணலாம்:

 •  கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி
 •   9-12 வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு சைக்கிள் 
 •  பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்ய அனுமதி 
 •  மாநிலம் முழுவதையும் சுற்றி 3,000 கிமீ நீள வட்டப் பாதை அமைத்தல் 
 • கோயில்களை புதுப்பிக்கவும், விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் ரூ.1,000 கோடி முதலீடு செய்யப்படும்
 •  விவசாயிகளின் உள்கட்டமைப்புக்கு ரூ.10,000 கோடி
 • அடுத்த 5 ஆண்டுகளில் குஜராத் இளைஞர்கள் 20 லட்சம் பேருக்கு  வேலைவாய்ப்பு
 • அடுத்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு 1 லட்சம் அரசு வேலைகள்
 • கேஜி முதல் முதுகலை பட்டம் வரை அனைத்து மாணவிகளுக்கும் இலவச தரமான கல்வி
 •  குஜராத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துதல் 
 •  பாசன வசதிக்காக ரூ.25,000 கோடி
இதனை தொடர்ந்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பேசுகையில், "எங்களது தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த இருபது ஆண்டுகளாக மக்களின் அன்பை பாஜக பெற்றுள்ளது. இது வெறும் பொய்யான வாக்குறுதிகள் மட்டுமல்ல, பிரதமர் மோடி வகுத்துள்ள வளர்ச்சி வரை படத்திற்கான எங்களது அர்ப்பணிப்பு. எங்களால் செய்ய முடியும் என்பதை மட்டுமே இங்கு வாக்குறுதிகளாக கொடுத்துள்ளோம். எங்களது ஆலோசனைகளை தீவிரமாக எடுத்துக் கொண்டு, செயல்படுத்துவோம் என்ற வாக்குறுதி வழங்குகிறேன்'' என்றார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

 • ஓ.பன்னீர்செல்வம்
 • எடப்பாடி பழனிசாமி
 • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
 • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்