பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு துரை வைகோ கேள்வி !..

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு  துரை வைகோ கேள்வி !..

 மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். இப்போது அவர் கூறியது.

"தலைமை தேர்தல் அதிகாரி ,மாநில ஆளுநர் தனிப்பட்ட அரசியல் கட்சி சித்தாந்தங்களுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டனத்திற்குரியது. கோவை கார் வெடிப்பு தீவிரவாதிகள் செயல். 

ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  காவல்துறையின் கவனக்குறைவு காரணமாகவும், தமிழக அரசின் காவல் துறையும் சரியாக செயல்படாததால் குண்டுவெடிப்பு  நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதே போன்ற ஒரு சம்பவம் கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்துள்ளது. சம்பவத்தையும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் ஏற்கனவே ஷிமோகா என்ற இடத்தில் ஒத்திகை பார்த்துள்ளனர். அந்த நபர்  பெங்களூரு 2020 ஆம் ஆண்டு கலவரத்தின் போது ஈடுபட்டு இருக்கிறார். இரண்டு வருடமாக இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். 

ஏன் இவரை பாஜக ஆளுகின்ற கர்நாடகா அரசு கண்டு கொள்ளவில்லை.கோவை குண்டுவெடிப்பு சம்பந்தமாக தமிழக அரசை குற்றச்சாட்டு கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கர்நாடகாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்ந்தமாக ஏன் வாய்திறக்க வில்லை. தமிழக அரசுக்கு ஒரு நியாயம் கர்நாடகா அரசு ஒரு நியாயமா?

குஜராத்தில் தொங்கு பாலம் விபத்தில் 140 பேர் இறந்துள்ளனர் பலர் காயமடை ந்துள்ளனர் .  இது வரை ஒரு எஃப்ஐ ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. அங்குள்ள குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அங்குள்ள நகராட்சி அதிகாரிகளின் கவனக்குறைவே பாலம் விபத்துக்கு காரணம். இது குறித்தெல்லாம் அண்ணாமலை பேசுவாரா?" இவ்வாறு அவர் கூறினார் .

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்