பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு துரை வைகோ கேள்வி ..

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு  துரை வைகோ கேள்வி ..

மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியது, "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக அரசின் மெத்தனமும், காவல்துறையின் கவனக்குறைவாலும் தான் கோவை கார் குண்டுவெடிப்பு  நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதே போன்ற ஒரு சம்பவம் கர்நாடக மாநிலம் மங்களூருவிலும் தான்  நடந்துள்ளது.பாஜக ஆளுகின்ற கர்நாடகா அரசு ஏன் சம்பவத்தை கண்டு கொள்ளவில்லை.கோவை குண்டுவெடிப்பு சம்பந்தமாக தமிழக அரசை குற்றச்சாட்டும் அண்ணாமலையால், கர்நாடகாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை பற்றி ஏன் பேச முடியவில்லை.  தமிழக அரசுக்கு ஒரு நியாயம் கர்நாடகா அரசு ஒரு நியாயமா?

அதேபோல குஜராத்தில் தொங்கு பாலம் விபத்தில் 140 பேர் உயிரிழந்தனர்.  இதுவரை ஒரு எப் ஐ ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. இதற்கு குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அங்குள்ள நகராட்சி அதிகாரிகளின் கவனக்குறைவே பாலம் விபத்துக்கு காரணம். இது குறித்தெல்லாம் அண்ணாமலை பேசுவாரா?" இவ்வாறு அவர் கூறினார்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்