நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்பாளர்களிடம் மாமூல்... நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்பாளர்களிடம் மாமூல்... நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

இது தொடர்பாக தூத்துக்குடி ஒன்றிய பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் தங்கராஜ் காந்தி மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் ,

 தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுக்கோட்டை வளர்ந்துவரும் ஒரு கிராம ஊராட்சி ஆகும். தட்டப்பாறை விலக்கு முதல் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலை புதுக்கோட்டையையும் தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கிறது. 

மேற்படி மாநில நெடுஞ்சாலை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் சாலை சுருங்கி உள்ளது. இச்சாலையில் சிவந்தி ஆதித்தனார் மன்றம் முதல் சார்பதிவாளர் அலுவலகம் வரை சாலையின் இருபுறமும் மீன் வியாபாரிகளும், தள்ளுவண்டி வியாபாரிகளும் காலை 7 மணி முதல் 11 மணி வரை வியாபாரம் செய்து வருவதால் பொது மக்களுக்கும் மாணவ, மாணவிகளுக்கும் பெருத்த இடையூறாக உள்ளது. 

மேலும் இதன் மூலம்  இது சுகாதாரகேடும் ஏற்பட்டு வருகிறது. 

ஆக்கிரமிப்பாளர்கள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும், சுகாதார துறை அதிகாரிகளுக்கும், ஊராட்சிமன்ற நிர்வாகிக்கும் மாதம் மாதம்  'கப்பம்' கட்டுவதாக கூறி வருகின்றனர். இவர்களால் இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், ஆக்கிரமிப்பாளர்களிடம் மாமூல் வாங்கி வரும் அரசு ஊழியர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்