"திராவிட மாடல் என்றாலே கமிஷன், கரெப்ஷன், கலெக்‌ஷன்" - எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.அப்போது திமுக அரசின் மீது பல்வேறு புகாரை மனுவாக கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக ஆளுநரிடம் புகார் அளித்தேன். உளவுத்துறை முன்கூட்டியே கண்டுபிடித்து இருந்தால் கோவை கார் வெடிப்பை தடுத்து இருக்கலாம்.

பொம்மை முதல்வராக ஸ்டாலினும், திறமையற்ற அரசாக தமிழக அரசும் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியமூர் தனியார் பள்ளியில் 12 வகுப்பு மாணவி ஸ்ரீமதி ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் 17ம் தேதி வரை எந்த விசாரணையும், நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். 

மாணவி உயிரிழந்த விவகாரத்தில் உளவுத்துறை தகவல் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் வன்முறை நிகழ்ந்திருக்காது. பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்காது.இதற்கு முழு பொறுப்பு இந்த விடியா திமுக அரசும், முதலமைச்சரும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

அதேப்போல மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பழக்கம் குறித்து நான் பலமுறை தெரிவித்துள்ளேன். நிர்வாக திறமையின்மை காரணமாக இந்த அரசால் தடுக்க முடியவில்லை.

அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு போதை பொருட்கள் சர்வசாதரணமாக கிடைக்கிறது.

இந்த ஆட்சியின் கொள்கையே கமிஷன், கரெப்ஷன், கலெக்‌ஷன் என்பது தான் .இதையே தாரக மந்திராக வைத்து செயல்படுகின்றனர்.

திராவிட மாடல் என்றால் கமிஷன், கரெப்ஷன், கலெக்‌ஷன்.அது தான் இன்றைக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது.வேறு எதுவும் இல்லை.

எந்த துறை எடுத்தாலும் லஞ்சம் தான்; லஞ்சம் இல்லாத துறையே கிடையாது என்ற நிலை உள்ளது.

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு உள்ளது.அதை அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார்.அதிமுக ஆட்சியில் மருந்து தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. காலவதி மருந்துகள் விவகாரத்தில் உச்சநீதிமன்றமே விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் பேனர்கள் வினியோகத்தில் முறைகேடு நடந்துள்ளது.

ரூ.350 செலவாகும் பேனருக்கு ரூ.7906 செலவு செய்துள்ளதாக கணக்கு காட்டுகிறார்கள். தமிழகத்தில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் டாஸ்மாக் பார்கள் இயங்கி வருகிறது.

 கலால் வரி செலுத்ததால் மதுபான ஆலையில் இருந்து கொண்டு வந்து மதுபானங்கள் பார்களில் விற்கப்படுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

மதுபானம் கொள்முதலில் மிகபெரிய ஊழல்;கொள்ளை நடந்துள்ளது.இதில் ஆயிரக்கணக்கான கோடி ஊழல் நடந்துள்ளது.இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு அனுமதி வழங்க பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். இதையேல்லாம் படித்து பார்த்து விசாரிப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளதாக இபிஎஸ் கூறினார்.

ஆளுநரை திமுக விமர்சித்து வருவது குறித்த கேள்விக்கு, அது எப்போதும் வாடிக்கையாக தானா இருக்கும். அவருக்கு ஜால்ரா போட்ட நல்லவர் என்று கூறுவார்கள். தவறை சுட்டிக்காட்டினால் ஆளுநர் மோசம் என்று கூறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்