அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 1ம் தேதி நடைபெறும் - துரை முருகன் அறிவிப்பு!

அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 1ம் தேதி நடைபெறும் - துரைமுருகன் அறிவிப்பு!

தி.மு.க.வில் நீண்ட காலம் பொதுச்செயலாளராக இருந்து சாதனை படைத்தவர் மறைந்த க.அன்பழகன். இனமான பேராசிரியர் என்று தி.மு.க.வினரால் அன்போடு அழைக்கப்பட்ட அவருக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிறைவு பெற உள்ளது. 

இதை சிறப்பாக கொண்டாட தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற நவம்பர் 1-ந் தேதி காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். 

மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. தி.மு.க.வில் இன்று புதிதாக இளைஞர் அணி மற்றும் மகளிர் அணிக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடப்பதால் அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. பாராளுமன்ற ஆயத்த பணிகள் பற்றியும் கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பு உள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்