அமைச்சருக்கு சிறையில் மசாஜ் செய்தது போக்சோ கைதி

அமைச்சருக்கு சிறையில் மசாஜ் செய்தது போக்சோ கைதி

டெல்லி திகார் சிறையில் அமைச்சருக்கு மசாஜ் செய்தது போக்சோ கைதி என்றும் அவர் பிசியோதெரபிஸ்ட் அல்ல என்றும் சிறைத்துறை தரப்பில் தெரிவித்துள்ளது.

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர ஜெயின், தற்போது சிறைக்குள் மசாஜ் செய்து கொண்ட விவகாரத்தில் சிக்கியுள்ளார்.

இவ்விகாரம் தொடர்பாக சிறைத்துறை மற்றும் அமலாக்கத்துறையிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

மேலும், இவ்விவகாரத்தில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சத்யேந்திர ஜெயினுக்கு பிசியோதெரபிஸ்ட் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சத்யேந்தர ஜெயினுக்கு மசாஜ் செய்துவிட்ட நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து திகார் சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘சத்யேந்தர ஜெயினுக்கு மசாஜ் செய்துவிட்டது சக கைதியான ரிங்கு என்பவர்தான்; போக்சோ பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதி ரிங்கு ஒன்றும் பிசியோதெரபிஸ்ட் அல்ல’ என்று தெரிவித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்