"ஒன் சைடு கேம் " ஆடுகிறது மத்திய அரசு -அமைச்சர் பி.டி.ஆர் குற்றச்சாட்டு...!

மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 3 -வது மண்டலத்தில் சுந்தரராஜபுரம் பகுதியில் புதிய ரேஷன் கடையை தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார் இதனை தொடர்ந்து சுப்பிரமணியபுரத்தில் மாநகராட்சி உறுப்பினரின் அலுவலகத்தை திறந்து வைத்தார் .

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,"தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரங்களில் அளிக்கப்படும் வாக்குறுதிகளில் இலவசங்கள் குறித்து எந்த வகையில் அந்த இலவசங்கள் வழங்கப்படுகிறது அதற்கான நிதி குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் எழுத்துப்பூர்வமாக என்று கடிதம் அனுப்பி இருக்கிறது இந்த கடிதம் குறித்து பதில் அளிக்க வேண்டியது அரசியல் கட்சித் தலைவர்கள் தான் என்றும் நான் எனது கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை என்றாலும் மாநில நிதி அமைச்சர் என்ற முறையில் அல்லது சராசரி ஒரு மனிதன் பகுத்தறிவுடன் சிந்தனையுடன் சொல்லும் கருத்து என்னவென்றால் தேர்தல் ஆணையம் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது நாங்கள் எந்த குழுவும் அமைக்கவில்லை என்று கூறிவிட்டு தற்போது கூறும் கருத்து என்பது முரண்பாடாக இருக்கிறது என்றும் அப்போதே நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த வழக்கு குறித்து எங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியது என்றும் எனவே இந்த கருத்துக்கு அரசியல் அனுபவம் வாய்ந்த எங்கள் கட்சியின் தலைமை  பதில் அளிக்கும்  என்றும் தெரிவித்தார்.

மேலும் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்ட பிலாஸ்பூர் எய்ம்சும், மதுரை எய்ம்சும். ஆனால், ஒன்று திறக்கப்பட்டு விட்டது.ஒன்றுக்கு இன்னமும் சுவர் கூட கட்டவில்லை. அரசியல் ரீதியாக மத்திய அரசு ஒன் சைட் கேம் ஆடுவது போல தெரிகிறது. மத்திய அரசு அரசியல் நோக்கத்துடன் தான் அனைத்தையும் செய்வதாக தெரிகிறது. மக்கள் நலனுக்காக எதையும் செய்வதாக தெரியவில்லை.

ஒரு  தலைப்பட்சமாக நிதியினை வைத்து பல அரசியல் தந்திர வேலைகளை செய்ய முடியும் என்று மத்திய அரசு  நினைக்கிறது  மேலும் மத்திய அரசு ஏதோ ஒரு புதிய பெயரினை வைத்து திட்டத்திற்கு ஒன்றிய  அரசு 60 சதவீதம் என்றும் மாநில அரசு 40% என்றும் அறிவித்து பின்னர் அந்த திட்டத்தினை ஓராண்டு காலம் கழித்து  40 சதவீதம் மத்திய அரசு வழங்கும் என்றும் மீதமுள்ள 60 சதவீதத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறது. பின்னர் இன்னும் சில ஆண்டுகள் கழித்து 25 சதவீதம் மத்திய அரசு வழங்குவது என்றும் மீதமுள்ள 75 சதவீதத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் கூறுகிறது ஆனால் அந்தத் திட்டத்திற்கு பிரதமர் பெயரில் திட்டத்தை வகுத்து வைத்துவிட்டு மாநில அரசு அதிக தொகையை வழங்க வேண்டும் என்று கூறுவது சரியான நிலை இல்லை." என்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்