இமாச்சலை கைப்பற்றுவாரா பிரியங்கா காந்தி?

இமாச்சலை கைப்பற்றுவாரா பிரியங்கா காந்தி?

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை நிறுவ பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது அகில இந்திய கட்சித் தலைமை. ஒரு பக்கம் ராகுல்காந்தி "பாரத் ஜோடோ" யாத்திரையை நடத்தி வருகிறார்.

இதனிடையே காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் வருகிற அக்.17ல் நடைபெற இருக்கிறது. சசி தரூரைக் காட்டிலும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவுகள் குவிந்து வரும் நிலையில் அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாகவே கட்சி வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன.

கார்கே கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் கட்சியில் காந்தி குடும்பத்தின் ஆட்சி முற்றுப்பெறும். 

இப்படி ஒரு சூழலில் வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜக ஆளும் மாநிலங்களில் வியூகங்களையும், பிரசார யுக்திகளையும் மாற்றி அமைக்க  கடும் பிரயத்தனங்கள் செய்யப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக பாஜக ஆளும் இமாச்சல பிரதேசத்தை கைப்பற்ற அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தற்போதே களமிறங்கியுள்ளார்.

கார்கேவின் அனுமதியை கவனத்தில் கொள்ளாமலேயே பிரியங்கா காந்தியின் இமாச்சல் பிரசார சுற்றுப்பயணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உலவுகின்றன. அதிக அளவிலான சமூக வலைதள விளம்பரங்களும், சுவரொட்டிகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. 

கார்கே பதவியேற்ற பின்னர் பொதுச் செயலாளர் பதவியில் பிரியங்கா காந்தி நீடிப்பாரா என்ற கேள்வியும் வலைய வருகிறது. ஆனால் கண்டிப்பாக அவர் பதவியில் நீடிப்பார் என்றும், இமாச்சல பிரதேச தேர்தல் பிரசாரத்திற்கு எங்களின் நட்சத்திரப் பிரச்சாரகராக பிரியங்கா தலைமை தாங்குவார் எனவும், அக்.10-ம் தேதி சோலனில் நடைபெறும் பேரணியில் காங்கிரஸ் பிரச்சாரத்தை தொடங்குவார் என்றும் இமாச்சலப் பிரதேசத்தின் ஏஐசிசி பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இமாச்சலை தாண்டி  குஜராத்திலும் காங்கிரஸ் பிரசாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.  

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பிரியங்காவின் விறுவிறுப்பான பிரசாரம் முக்கிய பங்கு வகித்த நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் வரவிருக்கும் தேர்தலிலும் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இமாச்சலின் மகள் என அழைக்கப்படும் அவர் அங்கு கணிசமான நேரத்தை செலவிடுவார். மாவட்டங்கள் முழுவதும் பேரணிகளில் உரையாற்றுவார் என அம்மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்