அ.தி.மு.க. அரசின் திட்டங்களையே தற்போது தி.மு.க. திறந்து வைத்து வருகிறது - எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. அரசின் திட்டங்களையே தற்போது தி.மு.க. திறந்து வைத்து வருகிறது - எடப்பாடி பழனிசாமி
மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் மின் கட்டணம், சொத்து வரியை தி.மு.க. அரசு உயர்த்தியுள்ளது என எடப்பாடி கூறினார்.

சென்னையில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், "அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வரும் வரை பொதுக்குழு கூட்ட மாட்டோம் என நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளோம்.சென்னையில் மழைநீர் வடிக்கால் பணிகள் மெத்தனமாக நடைபெற்று அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டப்பணிகளை தான் தி.மு.க. தொடர்கிறது. எந்த புதிய, பெரிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை.அ.தி.மு.க. அரசின் திட்டங்களையே தி.மு.க. திறந்து வைத்து வருகிறது.
 
மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்தியுள்ளது .மின் கட்டணம், சொத்து வரி உயர்வை மக்களால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்?.தி.மு.க. ஆட்சியில் மக்கள் துன்பத்தையும் வேதனையும் தான் உள்ளார்கள்" என கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்