புதுச்சேரியில் இந்து முன்னணி பந்த் அறிவிப்பு

புதுச்சேரியில் இந்து முன்னணி பந்த் அறிவிப்பு

புதுச்சேரி மாநில இந்து  முன்னணி தலைவர் அ.வா.சனில் குமார் விடுத்துள்ள அறிக்கை: 

இந்து தர்மத்தின் மீது அவதூறு பரப்பும் நோக்கத்துடன் தொடர்ந்து பொய்யான இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி இந்து விரோத சக்திகள் பிரசாரம் செய்து வருகின்றன.

அந்த வகையில் திமுகவின் பொது செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா திராவிட கழக பொதுக்கூட்டத்தில் இந்துக்களை வேசி மகன் என்று பேசியிருப்பது நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் மத்தியில் வருத்தத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

இந்த இழிவான பேச்சை கண்டித்து ஆ.ராசா எம்பி மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து இந்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் வருகிற 27ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.25%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.2%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.55%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்