மதியழகனுக்கு கிரீன்; செங்குட்டுவனுக்கு ரெட் - கிருஷ்ணகிரி மாவட்ட திமுக

மதியழகனுக்கு கிரீன்; செங்குட்டுவனுக்கு ரெட் - கிருஷ்ணகிரி மாவட்ட திமுக

திமுகவின் 15-வது பொதுத்தேர்தல், புதிதாக பிரிக்கப்பட்ட  மாவட்டங்களின் அடிப்படையில் 77 மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் நடைபெறுகிறது. 

மாவட்டச் செயலர், அவைத் தலைவர், 3 துணைச்செயலர்கள், பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர், உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, ஒரு பொறுப்புக்கு ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். 

இதில், கட்சிக்காரர்களை சரிவர அரவணைத்து செல்லாத மாவட்ட செயலாளர்கள், செலவு செய்யாத மாவட்ட செயலாளர்கள், புகார்களுக்கு உள்ளாகும் மாவட்ட செயலாளர்களை மாற்றி விட்டு புதிய மாவட்ட செயலாளர்களை கொண்டு வர மேலிடம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

அந்த வகையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான செங்குட்டுவனுக்கு கல்தா கொடுத்துட்டு மதியழகனுக்கு கிரீன் சிக்கனல் கொடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட உடன்பிறப்புகளிடையே பரபரப்பு பேச்சாக இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட உடன்பிறப்புகளிடம் பேசினோம்,  கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளராக இருக்கும் தளி பிரகாஷ்  எம்எல்ஏ தான், மீண்டும் மாவட்ட செயலாளர் அவர்தான். அதுதான் அதில் எந்த மாற்றமும் இல்லை. 

அங்கே மாநகராட்சி மேயர் சத்யா, மாவட்ட அவைத் தலைவராக இருக்கும் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கும் சுகுமார், சிறுபான்மைப் பிரிவு விஜயகுமார், கவுன்சிலர் என்.எஸ்.மாதேஸ்வரன் என பலர் இருந்தாலும் பிரகாஷ் எம்எல்ஏவை எதிர்த்து களம் காணும் அளவுக்கு யாருக்கும் தெம்போ , திராணியோ இல்லை. 

இருந்தாலும், பிரகாஷ் மாவட்ட துணை செயலாளராக யுவராஜையும், மாவட்ட பொருளாளராக சுகுமாரையும் தனது அணியில் சேர்த்துக் கொண்டார். அதனால், மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ தான் என்பது நூறு சதவீதம் முடிவாகிவிட்டது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில்தான், மாவட்ட செயலாளராக இருக்கும் செங்குட்டுவனுக்கும், பர்கூர் எம்எல்ஏ மதியழகனுக்கும் கடும் போட்டி இருந்தது. 

இதில், மதியழகன், ரஜினி மன்றத்திலிருந்து கட்சிக்கு வந்தவர், கட்சி உடன்பிறப்புகளிடம், நிர்வாகிகளிடம் அறிமுகம் இல்லை என செங்குட்டுவன் தரப்பும், ரஜினி மன்றத்திலிருந்தே வந்த கே.வி.சீனிவாசன் உட்பட பலர் மதியழகனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில், மதியழகனை, மாவட்ட செயலாளர் பதவிக்கு வரவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு வகையில் செங்குட்டுவன் தரப்பினர் அனைப் போட்டனர். 

அது மட்டுமல்ல, கைத்தறி அமைச்சர் காந்தி, ஏவா வேலு, துரைமுருகன்  என தலைமை வரை முட்டி மோதியுள்ளார். எந்த கதவும் திறக்காததால் வெக்சாகிவிட்டார். இதற்கு காரணம் , செங்குட்டுவன் மீது ஜாதிய பிரச்சினை, கே.பி.முனுசாமியுடன் ரகசிய தொடர்பு, அவரது உதவியாளரிடம் பேசிய ஆடியோ என எல்லாத்தையும் தலைமைக்கு புகார் அனுப்பியதில், தலைமை கடுப்பில் இருக்கின்றனர். 

இது மட்டுமல்லாமல் வேண்டாத விருந்தாளியாக அரசு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதை நாங்களே ரசிக்கவில்லை. இந்த நிலையில், மதியழகன் ரஜினி மன்றத்தில் இருக்கும் போதே மாவட்டம் முழுவதும் செல்வாக்கு இருக்கு இருந்தது. 

அது மட்டுமல்லாமல் பணத்தை தண்ணீர் மாதிரி செலவழிப்பார், நல்ல விசுவாசியாக இருப்பார். அதனால்,பர்கூர் எம்எல்ஏ மதியழகனுக்கு முதல்வர் தளபதி கிரீன் சிக்கனல் கொடுத்து உள்ளதால் அவரது ஆதரவாளர்கள், பேனர் வைத்து,  பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். செங்குட்டுவனுக்கு ஒரு மாநில பொறுப்பு காத்திருக்கிறது அது என்னவென்று தெரியவில்லை. அது மதிக்கு கொடுத்த பதவியாகக் கூட இருக்கலாம் என்கின்றனர்.

இது குறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் செங்குட்டுவனை தொடர்பு கொண்டு, மீண்டும் உங்களுக்கே மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என கூறிவந்த நிலையில், பர்கூர் எம்எல்ஏ மதியழகன் பெயர் அடிப்படுகிறதே என்றோம். மதியழகனுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுத்துட்டாங்கனு ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார்.

இதுகுறித்து விளக்கம் கேட்க பர்கூர் எம்எல்ஏ மதியழகனை தொடர்பு கொண்டபோது, மொபைல் பிஸியாகவும், என்கேஜிடாகவுமே இருக்கிறது.

-பொய்கை.கோ.கிருஷ்ணா

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.56%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    16.91%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.53%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்