ஆ.ராசா தமிழக தமிழக தாய்மார்களை நேரடியாக கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார்- அண்ணாமலை

ஆ.ராசா தமிழக தமிழக தாய்மார்களை நேரடியாக கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார்- அண்ணாமலை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "தமிழக தாய்மார்களை நேரடியாக கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார் ஆ.ராசா. அவரது பேச்சை கண்டித்து குரலெழுப்பிய 107 பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது தொடர்ந்தால் தமிழக சிறைகள் நிரம்பும் நிலை ஏற்படும்.

கடைசி பாஜக தொண்டர் இருக்கும் வரை ஆ.ராஜா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம். சிறைக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல. மு.க.ஸ்டாலின் மிசா வழக்கில் சிறை செல்லவில்லை. அவர் வேறு எதற்காகவோ சிறைக்கு சென்றுள்ளார். இனி தமிழகத்தில் எங்களது அரசியில் அதிரடியாக இருக்கும். மோடிஜியின் ஆட்சியில் தொடர்ந்து குறைகளை மட்டுமே திமுக அரசு சொல்லி வருகிறது.

குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் தான் குறையை பார்ப்பர். ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகியுள்ளது தமிழகத்தை இருள் சூழ்ந்துள்ளது. கஞ்சா வியாபாரிகளை கைது செய்யாமல் பாஜகவினரை கைது செய்கிறார்கள். எதிர்த்து பேசக்கூடாது என்கிறார்கள். ஆவின் பால் மூன்று முறை விலை ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் பால் விற்கும் விவசாயிக்கு ஒரு முறை கூட உயர்த்தி தரவில்லை" எனக் கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்